×

5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

பிரிட்ஜ்டவுன்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தியது. பார்படாஸ், கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது. கேப்டன் எராஸ்மஸ் அதிகபட்சமாக 52 ரன் (31 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஸேன் கிரீன் 28, நிகோலாஸ் டாவின் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். அடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து வென்றது. கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 47 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெற்றிக்கு உதவினார். மைகேல் லீஸ்க் 35, மைகேல் ஜோன்ஸ் 26, பிராண்டன் மெக்முல்லன் 19 ரன் எடுத்தனர். அதிரடியாக 35 ரன் (17 பந்து, 4 சிக்சர்) விளாசிய லீஸ்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஸ்காட்லாந்து 2 புள்ளிகள் பெற்றது.

The post 5 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தியது ஸ்காட்லாந்து appeared first on Dinakaran.

Tags : Scotland ,Namibia ,Bridgetown ,ICC World Cup T20 League Group B match ,Kensington Oval ,Barbados ,Dinakaran ,
× RELATED யூரோ கோப்பை கால்பந்து தொடரின் முதல்...