×

பாகிஸ்தானை பந்தாடி அமெரிக்கா அமர்க்களம்

பாகிஸ்தான் அணியுடன் டாலஸ் நகரில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், அமெரிக்கா பரபரப்பான சூப்பர் ஓவரில் வெற்றியை வசப்படுத்தி வரலாற்று சாதனை படைத்தது. டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச… பாகிஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. கேப்டன் பாபர் ஆஸம் 44, ஷதாப் கான் 40, ஷாகீன் அப்ரிடி 23, இப்திகார் 18 ரன் விளாசினர். அமெரிக்க பந்துவீச்சில் கென்ஜிகே 3, நேத்ரவால்கர் 2, அலி கான், ஜஸ்தீப் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அமெரிக்காவும் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுக்க, ஆட்டம் சரிசமனில் (டை) முடிந்தது.

கேப்டன் மொனாங்க் படேல் 50 ரன் (38 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), கவுஸ் 35, ஆரோன் ஜோன்ஸ் 36* ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), நிதிஷ் குமார் 14* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் அமெரிக்கா 1 விக்கெட் இழப்புக்கு 18 ரன் எடுக்க, பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 13 ரன் மட்டுமே எடுத்து பரிதாபமாகத் தோல்வியை தழுவியது. பலம் வாய்ந்த பாகிஸ்தானுடன் முதல் முறையாக, அதிலும் உலக கோப்பையில் மோதிய அமெரிக்கா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. மொனாங்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post பாகிஸ்தானை பந்தாடி அமெரிக்கா அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : America ,Pakistan ,A Division League ,Dallas, USA ,Super ,
× RELATED 2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின்...