×

சில்லி பாயின்ட்…

* ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் விளையாடும் சென்னையின் எப்சி அணியில் புதிதாக மிசோரமைச் சேர்ந்த பிசி லால்டின்புயா (27) இணைந்துள்ளார். தற்காப்பு ஆட்டக்காரரான இவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு சென்னை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. லால்டின்புயா ஏற்கனவே ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்காக விளையாடி உள்ளார்.
* கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் (ஆக.30 – அக்.7) களமிறங்கும் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக இலங்கை சுழல் மஹீஷ் தீக்‌ஷனா, தென் ஆப்ரிக்க நட்சத்திரங்கள் டி காக், டேவிட் மில்லர் மீண்டும் விளையாட உள்ளனர்.
* தென் ஆப்ரிக்காவின் உள்ளூர் டி20 தொடரான எஸ்ஏ20 அடுத்த ஆண்டு ஜன.9ம் தேதி தொடங்கி பிப்.8ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* நடப்பு உலக கோப்பை டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சும் மிக பலம் வாய்ந்ததாக, எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளதாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
* நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் துணை பயிற்சியாளராக நியூசி. ஆண்கள் அணி முன்னாள் நட்சத்திரம் கிரெய்க் மேக்மில்லன் (47 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டன் (ஆஸி.) இணை (2வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது.
* இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய நட்சத்திரம் லக்‌ஷயா சென் 22-24, 18-21 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சென்னிடம் போராடி தோற்றார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : PC ,Laldinbuya ,Mizoram ,Chennai FC ,ISL football series ,Chennai ,Jamshedpur FC… ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...