×

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு: கடைசி போட்டியில் கண்ணீருடன் விடைபெற்றார்

கொல்கத்தா: இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். உலக கோப்பை கால்பந்து தொடருக்கான ஆசிய மண்டல தகுதி தேர்வு போட்டியில் இந்தியா, குய்த் அணிகள் கொல்கத்தாவில் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனிடையே இப்போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார். போட்டி முடிந்து கண்ணீருடன் வெளியேறிய அவருக்கு சக வீரர்கள், மைதானத்தில் குடி இருந்த ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்தனர். சுனில் சேத்ரி இதுவரை 151 சர்வதேச போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இந்திய அணிக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையுடன் நாட்டின் கால்பந்து விளையாட்டை அடுத்தகட்டத்துக்கு அழைத்து சென்றவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

The post இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு: கடைசி போட்டியில் கண்ணீருடன் விடைபெற்றார் appeared first on Dinakaran.

Tags : Sunil Chhetri ,Kolkata ,India ,Kuwait ,Asian Zone Qualifier ,World Cup Football Series ,Indian Football Team ,Dinakaran ,
× RELATED உலக கோப்பை தகுதிச்சுற்று கால்பந்து: இந்தியா – குவைத் இன்று மோதல்