×

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,800-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு ரூ.40ம், சவரனுக்கு ரூ.320ம் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கிராம் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,840 க்கு விற்பனையாகிறது. சவரன் ரூ.54,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.58,480 ஆகவும், கிராம் ஒன்று ரூ.7,310 ஆகவும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 ரூபார் 50 காசுகள் உயர்ந்து ரூ.100.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 1,00,500 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

The post மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.54,720க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Shavran ,Tamil Nadu ,South India ,Shavaran ,Dinakaran ,
× RELATED தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருட்டு!!