- சுண்டம்பட்டி
- சுகாதார வளாகம்
- கந்தர்வகோட்
- சுந்தம்பட்டி ஹெல்த் காம்ப்ளக்ஸ்
- புதுக்கோட்டை மாவட்டம்
- கந்தர்வகோட்டை யூனியன் மகளிர் சுகாதார வளாகம்
- சுந்தம்பட்டி கிராமம்
- தின மலர்
கந்தர்வகோட்டை, ஜூன்7: கந்தர்வகோட்டை அடுத்த சுந்தம்பட்டி சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சுந்தம்பட்டி கிராமத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகம் மிகவும் பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இதை சீரமைக்க இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சேர்ந்த சுந்தம்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகில் உள்ள ஊரணி கரைமேல் மகளிர் சுகாதார வளாகம் அமைந்துள்ளது. இந்த சுகாதார வளாகம் தற்போது, பொதுமக்கள் பயன்பாடு இல்லாமல் சிதிலமடைந்து குடிநீர் பைப்புகள் தொட்டிகள் உடைந்து பயன் அற்ற நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி எந்த ஒரு பயன்பாடுகளும் இல்லாமல் கிடக்கும் மகளிர் சுகாதார வளாகத்தை, கந்தர்வகோட்டை ஒன்றிய நிர்வாகம் விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சுந்தம்பட்டி சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.