×

பாலியல் புகாரை திரும்ப பெறாவிட்டால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என கொலை மிரட்டல்: காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் மீது போலீசில் நடிகை புகார்

சென்னை: பாலியல் புகாரை திரும்பப் பெறவில்லை என்றால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவேன் என காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை தனக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் பூசாரியாக கார்த்திக் முனுசாமி என்பவர் பணியாற்றி வந்தார். கோயிலுக்கு சென்ற நடிகை ஒருவரை கருவறை அருகே அழைத்து சென்று வழிபட செய்த வகையில் பழக்கமான அந்த நடிகையை, பூசாரி கார்த்திக் முனுசாமி தனது பென்ஸ் காரில் அவரது வீட்டிற்கு அழைத்து சென்று தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், தன்னை விஐபிக்களுடன் பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தி தாக்கியதாக பாதிக்கப்பட்ட நடிகை விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 9ம் தேதி புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது போலீசார் நடத்திய விசாரணையில், கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி நடிகையுடன் கணவன் மனைவி போல் குடும்பம் நடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்த கோயில் பூசாரி தலைமறைவாகிவிட்டார். பின்னர் நடிகை தன்னை போல் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்து பாலியலில் தள்ளிஇருப்பதாகவும், இதனால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்ற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதேநேரம் தலைமறைவாக இருந்த வந்த கோயில் பூசாரியை தனிப்படை போலீசார் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் கைது செய்தனர். இந்நிலையில் கைது ெசய்யப்பட்ட காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமியை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு கடந்த 28ம் தேதி அழைத்து வந்து ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அப்போது புகார் அளித்த நடிகை நீதிமன்ற வளாக நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தார். இதை பார்த்த கைது செய்யப்பட்ட கார்த்திக் முனுசாமியின் தாய் மாமன் அருணாச்சலம் என்பவர், நடிகையிடம் ‘கார்த்திக் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று கொள்…. இல்லை என்றால் உன்னை இரண்டு துண்டுகளாக வெட்டி வீசிவிடுவேன். இல்லை என்றால் நான் சூனியம் வைத்து என்னை பைத்தியமாக சுற்ற விடுவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

உடனே நடிகை நீதிமன்றத்தில் இருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு நடிகைக்கு சிலர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த நடிகை விரும்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காளிகம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் அருணாச்சலம் எனக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த நபர்கள் என்பதால், தனியாக வசிக்கும் எனக்கு எந்த நேரத்திலும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம். எனவே அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் அருணாச்சலத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கார்த்திக் முனுசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், காளிகாம்பாள் கோயிலுக்கு வந்த வசதியான இளம் பெண்களை, கருவறை அருகே அழைத்து சென்று பூஜை செய்வதாக தன் வசப்படுத்தி பாலியல் தொந்தரவு செய்து, யாருக்கும் தெரியாமல் எடுத்து வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பணம் பறித்து சொகுசு கார் மற்றும் வசதியான வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது. அதேநேரம், பூசாரி கார்த்திக் முனுசாமியின் செல்போனில் இருந்து ஆபாச வீடியாக்கள் பலவற்றை போலீசார் தடயவியல் துறை அதிகாரிகள் மூலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் பிரபலமானவர்கள் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திக் முனுசாமியை 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. காளிகம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் அருணாச்சலம் எனக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அவர்கள் மிகவும் பலம் வாய்ந்த நபர்கள் என்பதால், தனியாக வசிக்கும் எனக்கு எந்த நேரத்திலும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.

The post பாலியல் புகாரை திரும்ப பெறாவிட்டால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என கொலை மிரட்டல்: காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் மீது போலீசில் நடிகை புகார் appeared first on Dinakaran.

Tags : Kalikampal ,CHENNAI ,Kalikampal temple ,Barimuna, Chennai ,
× RELATED காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு ஜாமின்!!