×
Saravana Stores

ஒரே துறையை கேட்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் : கூட்டணி கட்சிகளால் பாஜகவுக்கு அடுத்த தலைவலி!!

டெல்லி : வேளாண் துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி நிபந்தனை வைத்துள்ளார். மக்களவை தேர்தலில் இம்முறை பாஜவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமென்றால், 16 எம்பிக்களை வைத்துள்ள தெலுங்கு தேசம் மற்றும் 12 எம்பிக்களை வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு பாஜவுக்கு அவசியமாகி உள்ளது. இதன் காரணமாக, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபும், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாகி உள்ளனர். ஆகவே அவர்கள் பாஜ அரசுக்கு ஆதரவளிக்க இப்போதே பல்வேறு நிபந்தனைகள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.குறிப்பாக, இருகட்சிகளுமே மக்களவை சபாநாயகர் பதவி தங்களுக்கு வேண்டும் என்ற விருப்பத்தை பாஜவிடம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர ரயில்வே உள்ளிட்ட முக்கிய அமைச்சர் பதவியை தங்களுக்கு தர வேண்டுமென இரு கட்சிகள் கேட்டுள்ளன.

இந்த நிலையில், வேளாண் துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பாஜகவுக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமி நிபந்தனை வைத்துள்ளார். கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் உள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். மாண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளர் ஹெச்.டி.குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார். கோலார் தொகுதியில் மஜத சார்பில் போட்டியிட்ட மல்லேஷ் பாபுவும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட ப்ரஜ்வல் ரேவண்ணா தேர்தலில் தோல்வி அடைந்தார். 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்ட மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஒன்றிய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், வேளாண் துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பாஜகவுக்கு குமாரசாமி நிபந்தனை விதித்துள்ளார். வேளாண் துறையை ஏற்கனவே தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தங்களுக்கு வழங்க வலியுறுத்தி வருகின்றன.ஆகவே வேளாண் துறையை 3 கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

The post ஒரே துறையை கேட்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் : கூட்டணி கட்சிகளால் பாஜகவுக்கு அடுத்த தலைவலி!! appeared first on Dinakaran.

Tags : Telugu Nation ,United Janata Platform ,Secular Janata Platform ,BJP ,Delhi ,Kumarasamy ,Lok Sabha ,Janata Platform ,Parties ,
× RELATED பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க...