×

கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு

கோத்தகிரி: கோத்தகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், உரிய விலை கிடைக்காததால் தேயிலை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோத்தகிரி அதன் சுற்று வட்டார பகுதிகளில், பிரதான தொழிலாக தேயிலை விவசாயத்தை நம்பியே பெரும்பாலான தேயிலை தோட்ட சிறு குறு விவசாயிகள் உள்ளனர். தற்போது, கோடை மழை பெய்துள்ள நிலையில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிக விளைச்சல் இருக்கும் தற்போதைய சூழலில் தேயிலை பறிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால் சிறுகுறு தேயிலை விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகி தேயிலை பறிக்க முடியாமல் தேயிலை தோட்டங்களிலேயே தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, பசுந்தேயிலை விளைச்சல் அதிகம் இருப்பதால் தேயிலைக்கு உரிய விலை கிடைத்திடவும், காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை தோட்டங்களில் மேக மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பசுந்தேயிலைகளில் கொப்பள நோய் ஏற்படும் அபாயமும் ஏற்ப்பட்டுள்ளது. இதுபோன்று, தேயிலை விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோரிக்கை வலுக்கிறது.

The post கோத்தகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: தேயிலை மகசூல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Dinakaran ,
× RELATED சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்