×

தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்துள்ளார்: பழ.நெடுமாறன் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்துள்ளார் என பழ.நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜனநாயகத்தைச் சீரழித்து சர்வாதிகாரத்தை நிலைநாட்ட பாஜக ஆட்சி இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டது. தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்கள் உள்பட அமைச்சர்கள், தலைவர்கள் அனைவர் மீதும் அமலாக்கத்துறையின் மூலம் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

எந்தத் தேர்தலிலும் கண்டறியாத வகையில் அதிகார பலம், பணபலம் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தியும், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ச.க. வெற்றி பெறும் எனப் பொய்யாகப் பிரச்சாரம் செய்தும், நாட்டின் தலைமையமைச்சரின் தகுதிக்குச் சற்றும் பொருந்தாத வகையில் கீழிறங்கித் தரங்கெட்ட வகையில் மோடி அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்.

சனநாயகத்திற்குப் புறம்பான அவரின் பேச்சுகளைக் கண்டு வெறுத்துப்போன மக்கள் கொதித்தெழுந்து பா.ச.க.வுக்குத் தனிப் பெரும்பான்மைக்கூட கிடைக்காத வகையில் தோற்கடித்தனர். கூட்டணிக் கட்சிகளின் தயவில்லாமல் அவர் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை உருவாகியுள்ளது. அரசியல் சட்ட மாண்பையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் பா.ச.க.வையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தடம் பதிக்கவிடாமல் அடியோடு தோற்கடித்து பாசிச பேரபாயம் படரவிடாமல் தடுத்துவிரட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கிய கூட்டணி வேட்பாளர்களுக்கும், கட்சிகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரியனவாகுக இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் பாசிசத்தை முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறியடித்துள்ளார்: பழ.நெடுமாறன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu ,K. Stalin ,Chennai ,Stalin ,Nedumaran ,President of ,World ,Tamil ,Ecumulation Pha Pha ,BJP ,CM ,Uddhav Thackeray ,Nedumaran Pradu ,
× RELATED குவைத் தீ விபத்தில் இந்தியர்கள்...