×

சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா

கமுதி, ஜூன் 6: கமுதி சின்னம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு காப்புக்கட்டுடன் துவங்கியது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தினமும் விசேஷ பூஜை நடைபெற்று, வரும் 11ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது.

கோவில் முன்பு ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபட்டு மாவிளக்கு நேர்த்திக்கடன் போன்றவை செலுத்தி வழிபாடு நடத்துவர். 12ம் தேதி திருவிளக்கு பூஜையும், 13ம் தேதி முளைப்பாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

The post சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Vaikasi Pongal Festival ,Chinnamman Temple ,Kamudi ,Kamudi Chinnamman ,Temple ,Vaikasi Pongal ,Swami ,
× RELATED தவெக கமுதி ஒன்றியம் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்