×

தவெக கமுதி ஒன்றியம் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்

கமுதி, ஜூன் 23: கமுதியில், தமிழக வெற்றிக்கழக கட்சித் தலைவர் விஜய் 50வது பிறந்தநாள் விழா கமுதி ஒன்றியம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. கமுதி-பேருந்து நிலையம் முன்பு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் வழிகாட்டுதலின்படி, மாவட்ட தலைவர் மலர்விழி ஜெயபாலா அறிவுறுத்தலின்பேரில், கமுதி ஒன்றிய தலைவர் மதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. சந்தைப் பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் 200 பேருக்கு நோட்டு, பேனா, பென்சில் வழங்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், கமுதி ஒன்றிய, நகர, கிளை அணி நிர்வாகிகள் ரமேஷ், விக்னேஸ்வரன், முனீஸ்வரன், அஜித்குமார், காளித்துரை காளிமுத்து, உப்பங்குளம் கருப்பசாமி, முத்துசாமி, திருப்பதி, பாரதி, ரவிச்சந்திரன், பாலமுருகன் பாலகிருஷ்ணன், தர்மராஜ், கருப்பசாமி, வாஞ்சிநாதன், மாவீரன், சுந்தர், ஜான்ராஜ் பெருமாள், வல்லரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தவெக கமுதி ஒன்றியம் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Daveka Kamudi Union ,Kamudi ,Tamil Nadu ,Victory ,Kazhagam Party ,President ,Kamudi Union ,station ,state general secretary ,Bussi Anand ,Malarvizhi Jayapala ,Thaveka Kamudi Union ,Dinakaran ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet