×

இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தொண்டி, ஜூன் 6: தொண்டியில் தமிழ்நாடு தவ்கித் ஜமாத் சார்பில் இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீனம் மீது கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலை நிறுத்த கோரியும், இஸ்ரேலை கண்டித்தும் தொண்டியில் தமிழ்நாடு தவ்கித் ஜமாத் ராமநாதபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ரகுமான் அலி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் கண்டன உரையாற்றினார். மாவட்ட துனைத் தலைவர் அபுதாஹிர், பொருளாளர் ஆதில், துணை செயலாளர் யாசர் உட்பட பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் அலபார் அமீன் நன்றி கூறினார்.

The post இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Israel ,Thondi ,Tamil Nadu Tawkit Jamaat ,Palestine ,
× RELATED காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு...