×

தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், ஜூன் 22: தஞ்சாவூர் நகர் பொது மக்கள் நலன் கருதி, மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்வரும் 25ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் தஞ்சாவூர் நீதிமன்றசாலை, செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தஞ்சாவூர் நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய ஹவுசிங் யூனிட்,

காந்திஜி ரோடு, மருத்துவகல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி,ரஹ்மான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைகழக வளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு ஏதேனும் குறை இருப்பின் நேரில் வந்து மனு அளித்து தீர்வு காணலாம் என செயற்பொறியாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

The post தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 25ம் தேதி மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Executive ,Thanjavur ,Electricity Consumer Grievance Redressal Day ,Thanjavur Executive Engineer ,Redressal ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே...