×

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

ஜெருசலேம்: காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு வசதியாக ரபாவில் உள்ள 12 கிமீ சாலையில் மட்டும் பகல் நேர சண்டை நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவின் ரபா பகுதியில் ஹமாஸ் நிலைகள் மீது தீவிர வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தொடுத்துவருகிறது. போர் 9வது மாதத்தை எட்டியுள்ளதால், காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காசாவின் எகிப்து எல்லையோர பகுதியான ரபாவில் 12 கிமீ துார சாலையில் காலை 8 மணியில் இருந்த இரவு 7 மணி வரைக்கும் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் பகல் நேர போர் நிறுத்தம் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கான்யூனிஸ், முவாஸி மற்றும் மத்திய காசா பகுதிகளுக்கு உதவி பொருட்கள் வேகமாக சென்றடையும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

 

The post காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : JERUSALEM ,Israel ,Raba ,Gaza ,Hamas ,Rabaa ,Dinakaran ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் போர்;...