சென்னை: பாலிவுட் நடிகை அலியா பட், ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் பல மொழிகளில் திரைக்கு வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஸ்ரயா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். ராஜமவுலி இயக்கியுள்ளார். இப்படத்தின் தமிழ் பதிப்பு, இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற பெயரில் வெளியாகிறது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. இதில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், எஸ்.எஸ்.ராஜமவுலி ஆகியோருடன் பங்கேற்ற அலியா பட்,கூறியதாவது: கடந்த 2014ல் இந்தியில் வெளியான 2 ஸ்டேட்ஸ் என்ற படத்தில் தமிழ் பெண்ணாக நடித்தேன். இப்போது ஆர்ஆர்ஆர் படத்துக்காக சென்னை வந்துள்ளேன். என் நீண்ட நாள் கனவு இன்று நனவானது போல் இருக்கிறது. ரசிகர்களைப் போலவே நானும் ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீசை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பாலிவுட் படங்களில் மட்டுமே நடிப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. தொடர்ந்து தென்னிந்திய படங்களில் நடிக்க விரும்புகிறேன். …
The post தென்னிந்திய படங்களில் நடிப்பேன்: சென்னையில் நடிகை அலியா பட் பேட்டி appeared first on Dinakaran.
