×

மெஞ்ஞானபுரம் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான மறுமலர்ச்சி நாள் விழா

உடன்குடி, ஜூன் 5: மெஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட அளவிலான கல்வியியல் கல்லூரி மாணவிகளுக்கான மறுமலர்ச்சி நாள் விழா நடந்தது. போட்டியை தாளாளர் கிறிஸ்டோபெல் ஆனந்தராஜ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெபசெல்வி அற்புதசீலி முன்னிலை வகித்தார். தொடர்ந்து மாணவிகளின் ரங்கோலி, நெருப்பு இல்லாமல் சமையல், டிசர்ட்டில் பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக ஏ.டி.கே.ஜெயசீலன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மெஞ்ஞானபுரம் ஜாண்தாமஸ் பெண்கள் கல்வியியல் கல்லூரிக்கு சுழற்கோப்பை பரிசு வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மேகலா செய்திருந்தார்.

The post மெஞ்ஞானபுரம் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான மறுமலர்ச்சி நாள் விழா appeared first on Dinakaran.

Tags : RENAISSANCE DAY ,MENJANAPURAM COLLEGE ,Udonkudi ,Nella ,Tuthukudi District ,Pedagogical College ,Mennanapuram Jandamas Women's Pedagogical College ,Kristóbel Anandaraj ,Renaissance Day Ceremony ,Mennanapuram College ,Dinakaran ,
× RELATED உடன்குடி அருகே 800 கிலோ கருப்பட்டி கொள்ளை