×

நேசபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

உடன்குடி, அக். 18: உடன்குடி அருகே நேசபுரம் முத்துமாலையம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. கடந்த 14ம் தேதி தொடங்கிய விழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், வில்லிசை, 108 திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழா நிறைவு நாளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் இந்து ஆன்மீக வினாடி வினா நடந்தது. அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் கேசவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் யோகலட்சுமி, ரதீஸ்வரி, பாலசுந்தரி, ரேவதி, கிருஷ்ணதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிவக்குமார், தங்கவேல், விஜயகுமார், லிங்கமுத்து, முருகன், சுயம்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post நேசபுரம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : 108 ,Thiruvilaka Pooja ,Nesapuram Temple ,Udonkudi ,Nezapuram Muthumalayamman ,Udankudi ,Amman ,thiruvalakku ,Thiruvilaka ,Pooja ,
× RELATED கோயில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு...