×

10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி

திருமலை: தெலங்கானாவில் உள்ள 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், எம்எம் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றது. தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் வாக்குகள் 16.70 சதவீதமாக குறைந்துள்ளது. பாஜக 35.01 சதவீதம் பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 40.11 சதவீதம் வாக்குகள் பெற்று 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 

The post 10 ஆண்டு ஆட்சியில் இருந்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் போன பிஆர்எஸ் கட்சி appeared first on Dinakaran.

Tags : PRS party ,Tirumala ,Congress ,BJP ,MM ,Lok Sabha ,Telangana ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் காலியாகும்...