×

ராஜஸ்தானில் பாதியை இழந்த பாஜ

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடந்தது. கடந்த 2019ல் 25 தொகுதிகளையும் பாஜ தன் வசப்படுத்தியது. ஆனால் இந்த முறை பாஜவுக்கு காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது. மக்களவை தேர்தலில் 14 தொகுதிகளில் மட்டுமே பாஜவுக்கு வெற்றி உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில், காங்கிரஸ் 8 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு இடத்தையும் கைப்பற்றுகின்றன.

மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் பாஜ வேட்பாளர் மஞ்சு சர்மா 2,27,642 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ஆல்வார் தொகுதியில் மாநிலங்களவை எம்பியும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலையில் இருந்து வருகின்றார். ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பிகானெர் தொகுதியில் சுமார் 28,142 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

*மக்களவை சபாநாயகர் வெற்றி முகம்
கோட்டா தொகுதியில் பாஜ சார்பாக மக்களவை சபாநாயகரான ஓம்பிர்லா பாஜ வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவர், 41 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்த தொகுதியின் எம்பியாக இருந்து வருகின்றார். இந்த முறை வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக வெற்றி பெறும் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.

* கஜேந்திர சிங் 3வது முறை வெற்றி
ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரான கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூர் தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இவரும் ஏற்கனவே இரண்டு முறை எம்பியான நிலையில் மூன்றாவது முறையாக போட்டியிட்டுள்ளார். இந்த முறை சுமார் 1.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

 

The post ராஜஸ்தானில் பாதியை இழந்த பாஜ appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajasthan ,Congress ,Lok Sabha ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...