×

இந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் இந்தியா கூட்டணி

பா.ஜவுக்கு அரசியல் ரீதியாக இந்தி பேசும் மாநிலங்கள் அதிக ஆதரவு அளித்து வந்தன. அங்கு மொத்தம் 225 தொகுதிகள் உள்ளன. 2014, 2019ல் பா.ஜ தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு இந்தி பேசும் மாநிலங்கள் தான் காரணம். இந்த முறை பா.ஜ தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனதற்கு இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியா கூட்டணி மீண்டும் மலர்ந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. பா.ஜவுக்கு முதல் சறுக்கல் உபியில் நடந்தது.

அங்கு இந்தியா கூட்டணி 42 இடங்களை பிடித்து அசத்தியது. உபியில் பா.ஜ 2014 தேர்தலில் 71 இடங்களில் வெற்றி பெற்றது. 2019ல் 62 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது 34 இடங்களில் சுருங்கி விட்டது. அதே போல் ராஜஸ்தானில் 11, அரியானா 5, பீகார் 7, ஜார்கண்டில் 6 இடங்களை பெற்றது. ஆனால் மத்தியப் பிரதேசம் 29, டெல்லி 7, உத்தரகண்ட் 5 , சட்டீஸ்கரில் 11ல் 10 இடங்களை பா.ஜ பிடித்தது.

The post இந்தி பேசும் மாநிலங்களில் மீண்டும் இந்தியா கூட்டணி appeared first on Dinakaran.

Tags : India alliance ,BJP ,Dinakaran ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...