×

தேர்தல் முடிவுகளை பாமக ஏற்கிறது மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்: அன்புமணி கருத்து

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்: தமிழ்நாட்டில் பாமக எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. தேர்தல் முடிவுகள் வருத்தமளித்தாலும், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால் அதை ஏற்றுக் கொள்கிறது. பாமகவின் முதன்மை நோக்கம் மக்கள் பணி செய்வது தான். மக்களின் நம்பிக்கையை பெறுவதன் மூலம் மட்டும்தான் ஜனநாயகத்தில் வெற்றி சாத்தியமாகும். எனவே, மக்களின் நம்பிக்கையையும், ஆதரவையும் பெறுவதற்காக கடந்த காலங்களை விட இரு மடங்கு அதிகமாக பாமக உழைக்கும். மக்கள் ஆதரவை மீண்டும் வெல்லும்.பாட்டாளி மக்கள் கட்சிக்கு தோல்வி புதிதல்ல. மிகப்பெரிய சரிவுகளைக் கண்டு மீண்டு வந்த வரலாறு உண்டு. எனவே, தேர்தல் முடிவுகளைக் கண்டு பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கவலைக் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தேர்தல் முடிவுகளை பாமக ஏற்கிறது மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம்: அன்புமணி கருத்து appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMK ,Tamil Nadu ,BAMAKA ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...