×

தமிழகத்திற்கு 7 முறை வந்த பிரதமர் மோடி! ஒரு தொகுதியில் கூட வெற்றி முகம் இல்லையே!.

சென்னை : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 7 முறை வந்த போதிலும் பாஜக வேட்பாளர்கள் யாருமே முன்னிலையில் இல்லாதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சி, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அமமுக, தமாகா, பாமக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜக 19 தொகுதியில் போட்டியிட்டது. மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஏ.சிசண்முகம், பாரிவேந்தர், தேவநாதன் யாதவ், ஜான்பாண்டியன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதில் திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், மதுரை, நீலகிரி உள்பட பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் அளவுக்கு பாஜக பின்தங்கியிருந்தது. மற்ற தொகுதிகளில் தொடர்ந்து பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.

மேலும் தமிழகத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக ஒரு இடங்களில் கூட முன்னிலை இல்லை என்றே கூறலாம். குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர்களான தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, எல்.முருகன்,நயினார் நாகேந்திரன், கே.பி.ராமலிங்கம், ராதிகா சரத்குமார், பொன் ராதாகிரிஷணன் உள்ளிட்டோர் எவரும் முன்னிலை வகிக்கவில்லை. இதனிடையே தமிழ்நாட்டில் முதன்முறையாக 10 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் இப்போதே பாஜகவுக்குள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் டெல்லி தலைமையும் பாஜக தலைவர் அண்ணாமலை தான் அதிமுகவை கூட்டணிக்குள் வர விடாமல் தடுத்தார் என்று ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. இது போன்ற காரணங்களால் தேர்தலில் முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி பறிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழகத்திற்கு 7 முறை வந்த பிரதமர் மோடி! ஒரு தொகுதியில் கூட வெற்றி முகம் இல்லையே!. appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Tamil Nadu ,Chennai ,BJP ,Modi ,Akchi ,IJK ,India ,
× RELATED வரும் 20ம் தேதி சென்னை வரும் பிரதமர்...