×

கரூரில் மீண்டும் வெல்வாரா ஜோதிமணி?.. கடும் போட்டியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக: எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்..!!

சென்னை: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று போற்றப்படும் இந்திய மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 16ம் தேதி வெளியானது. அன்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில், கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி, கரூரில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜோதிமணி போட்டியிட்ட நிலையில் முன்னிலை வகித்து வருகிறார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 51,156 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 10,026 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 39,846 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.

The post கரூரில் மீண்டும் வெல்வாரா ஜோதிமணி?.. கடும் போட்டியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக: எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Adimuka ,Chennai ,Indian People's Election ,Karur ,Dinakaran ,
× RELATED குஜராத் தொழிற்பேட்டைகளில் நிலம்...