×

போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு

 

விருதுநகர், ஜூன் 4: பூர்வீக நிலம் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக, விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சிவகாசி அருகே எம்.ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த ஈசாக்கு என்பவர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார். மனுவில், சிவகாசி தாலுகா மங்களம் கிராமத்தில் எனக்கும், தம்பி இன்பராசுக்கு சொந்தமான பூர்வீக நிலம் 22 செண்டு கூட்டுப்பட்டா முறையில் அனுபவித்து வருகிறோம்.

நிலத்தை யாருக்கும் தானமாகவோ, கிரையமாகவோ பாகப் பிரிவினையாகவோ எழுதி கொடுக்கவில்லை. இந்நிலையில் 2021ல் கிரைய ஆவணமாக போலியான பட்டா பதிவு செய்துள்ளனர். போலியான பத்திரத்தையும், பட்டாவையும் ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

The post போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Virudhunagar Collector ,Esaku ,M. Ramachandrapuram ,Sivakasi ,
× RELATED விருதுநகர் அருகே மாதச்சீட்டு நடத்தி...