×

சில்லி பாயின்ட்

* சமீபத்தில் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், புனேவை சேர்ந்த கேதார் ஜாதவ் (39) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை நேற்று அறிவித்தார். இந்தியாவுக்காக சர்வதேச களத்தில் 2014ல் அறிமுகமான கேதார் ஜாதவ் 73 ஒருநாள் போட்டியில் 1389 ரன் (2 சதம், 6 அரைசதம்), 9 சர்வதேச டி20ல் 122 ரன் (1 அரைசதம்) எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் 2010-2023 வரை டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு அணிகளுக்காக 95 ஆட்டங்களில் 1208 ரன் குவித்துள்ளார்.
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜப்பானின் ஒகாசாகி டட்சுகி நீச்சல் மன்றம் இணைந்து சென்னையில் இன்று சிறப்பு நீச்சல் பயிற்சி முகாமை நடத்துகிறது. ஜப்பான் நீச்சல் வீரர் யுமா எடோ தலைமையில், சென்னை வேளச்சேரி நீச்சல் வளாகத்தில் இந்த முகாம் 2 பிரிவுகளாக நடைபெறும். காலை 9-11 வரை பயிற்சியாளர்களுக்கும், மாலை 5-7 வரை வீரர், வீராங்கனைகளுக்காகவும் நடைபெறும். நீச்சல் வீரர்களுக்கான சத்துணவு முறைகள், பயிற்சி நுணுக்கங்கள், வீரர்களின் தேவைகள் குறித்து விளக்கப்படும். மேலும் விவரங்கள் அறிய: வேளச்சேரி வளாக அலுவலர் லோகநாதன் aquaticchennai@gmail.com; பயிற்சியாளர் மனோஜ் ஜெயகுமார் 7708760601.
* ஆயிரம் தரவரிசைப் புள்ளிகளுக்கான இந்தோனேசிய ஓபன் பேட் மின்டன் போட்டி ஜகார்தாவில் இன்று தொடங்குகிறது. அதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி காந்த், லக்‌ஷயா சென், கிரண் ஜார்ஜ், பிரியன்ஷூ ராஜ்வத் ஒற்றையர் பிரிவில் களம் காண உள்ளனர்.

The post சில்லி பாயின்ட் appeared first on Dinakaran.

Tags : Dinesh Karthik ,Pune ,Kedar Jadhav ,India ,Dinakaran ,
× RELATED அனைத்துவிதமான கிரிக்கெட்...