×

மெக்சிகோ அதிபர் தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஆளும் கட்சி சார்பில் மெக்சிகோ சிட்டி முன்னாள் மேயர் கிளாடியா ஷெயின் பாம் (61)என்பவரும், வலது சாரி கட்சியை சேர்ந்த சோசிட்டில் கல்வெஸ் என்பவர் உட்பட 3 பேர் போட்டியிட்டனர். கிளாடியா ஷெயின்பாமுக்கு அதிபராக உள்ள ஆண்ட்ரஸ் மனுவேல் லோபஸ் ஒப்ராடார் தீவிரமாக பிரசாரம் செய்தார்.மனுவேல் லோபஸ் மொரேனா என்ற இடது சாரி கட்சியை சேர்ந்தவர். இந்நிலையில் அதிபர் தேர்தலில் கிளாடியா ஷெயின்பாம் வெற்றி பெற்றுள்ளார். மெக்சிகோவின் 200 ஆண்டு வரலாற்றில் பெண் ஒருவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கிளாடியாவுக்கு 58.3 சதவீதம் முதல் 60.7 சதவீதம் வாக்குகள் கிடைத்தது.

The post மெக்சிகோ அதிபர் தேர்தலில் முதல்முறையாக பெண் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Mexico City ,Mexico ,mayor ,Claudia Shein Baum ,Socialite ,Galvez ,
× RELATED மெக்சிகோவில் கடும்...