×

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகளை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அஃபில், செபாஸ்டின் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில் அமர் என்பவர் தற்போது கைதாகி உள்ளார். பிரியாணி கடையில் ஆய்வுக்குச் சென்ற நகர சுகாதார ஆய்வாளர், நகர அமைப்பு உதவியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரி பிருந்தா, முருகராஜ் மீது தாக்குதல் நடத்திய கடை நிர்வாகி அஃபில், செபாஸ்டின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 

The post மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Afil ,Sebastian ,Amar ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...