×

போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது

பெரம்பூர்: போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (40). இவர் பெயிண்டர். நேற்று காலை ராஜசேகர் தனது நண்பர் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியை சேர்ந்த விநாயகம் (25) என்பவருடன் மது குடித்துள்ளார். அப்போது திடீரென அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதனால் விநாயகம் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை வெட்டியதில் காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதுகுறித்து புகாரின்படி, வியாசர்பாடி போலீசார் வழக்குபதிவு செய்து விநாயகத்தை கைது செய்தனர். விநாயகம் மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. இதனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பருக்கு சரமாரி கத்திக்குத்து: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Rajasekhar ,Gandhipuram ,Vyasarpadi, Chennai ,Vyasarpadi Gandhipuram ,Vinayakam ,
× RELATED திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய...