×

கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் ரகுபதி கூறினார். புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் 101வது பிறந்த நாள் விழா சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. பின்னர் அவர் அளித்த பேட்டி: 2004, 2009ம் ஆண்டு பாஜக தான் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேபோன்று தற்போது உள்ள கருத்துக்கணிப்பையும் தவிடு பொடி ஆக்கிவிட்டு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இமாச்சல பிரதேசத்தில் நான்கு இடங்கள்தான் உள்ளது. ஆனால் கருத்துக்கணிப்பில் ஆறிலிருந்து 8 இடங்கள் உள்ளதாக வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில் எம்பிக்கள் சீட்டை உயர்த்தி கருத்துக்கணிப்பு வெளியிட்ட நிறுவனங்கள் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் புதிதாக எம்பி சீட்டுகளை உருவாக்கியுள்ளதா என்ற சந்தேகம் வந்துள்ளது. இதிலிருந்தே கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்று கண்ணை மூடிக்கொண்டு யார் வேண்டுமானாலும் கூறிவிடலாம். எந்த கருத்துக்கணிப்பு நடத்தினாலும் அதுதான் வெளியாகும். கருத்துக்கணிப்பை மாற்றி கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post கருத்துக்கணிப்பை தவிடு பொடியாக்கி இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India Alliance ,Minister Raghupathi ,Pudukottai ,Minister ,Raghupathi ,Pudukottai district DMK ,Law Minister ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...