×

மின்சாரம் தாக்கி மாடு பலி

 

 

போச்சம்பள்ளி, ஜூன் 3: போச்சம்பள்ளி அருகே, மின்சாரம் தாக்கி மாடு பலியான நிலையில், அதனை தொட்ட சிறுமி படுகாயமடைந்தாள். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அப்புகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்கரை. விவசாயியான இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுயுடன் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் புளி மரம், வேறுடன் முறிந்தது. இந்நிலையில் அப்புகொட்டாய் பகுதியில் ஒரு மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இதையறியாமல் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டின் மீது மின் கம்பி உரசியது.

இதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகள் லட்சனா (11), அந்த மாட்டை தொட்டுள்ளாள். அப்போது மாடு மீது பாய்ந்த மின்சாரம், லட்சனா மீதும் பாய்ந்து தூக்கி வீசியது. இதை கண்ட அவர்கள் சிறுமியை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி
வருகிறார்கள்.

The post மின்சாரம் தாக்கி மாடு பலி appeared first on Dinakaran.

Tags : Bochambally ,Chakkarai ,Appukottai ,Bochampalli ,Krishnagiri district ,
× RELATED அரசு மகளிர் பள்ளி மாணவிகளுக்கு நோட்டுப்புத்தகம்