×

களத்தில் ஊடுருவிய ரசிகர் கைது

இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது (ரோகித் 23, பன்ட் 53, சூரியகுமார் 31, ஹர்திக் 40*). அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 122 ரன் எடுத்து 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது (மகமதுல்லா 40, ஷாகிப் அல் ஹசன் 28, டன்ஸித் ஹசன் 17).

இந்த பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஷிவம் துபே தலா 2, பும்ரா, சிராஜ், ஹர்திக், அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நஸ்ஸாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியின்போது, மைதானத்துக்குள் அத்துமீறி ஊடுருவிய ஒரு ரசிகரை நியூயார்க் போலீசார் கைது செய்தனர்.

 

The post களத்தில் ஊடுருவிய ரசிகர் கைது appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,India ,Bangladesh ,New York City, USA ,Rohit ,Dinakaran ,
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...