×

ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறார் சந்திரபாபு: அமைச்சர் ரோஜா பேட்டி

திருமலை: சந்திரபாபு தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறார் என அமைச்சர் ரோஜா பேசினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் மக்களும், ஊடகமும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்க கூடிய வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அன்று முடிவுகள் வெளியாக உள்ளது. எத்தனை சர்வே முடிவுகள் என்ன சொன்னாலும் நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வைத்தும், நலத்திட்டம் தொடர வேண்டும் என பெண்கள், மூத்த குடிமக்கள் என திரளாக வந்து இரவு 9 மணி வரை வரிசையில் நின்று வாக்கு பதிவு செய்தனர்.

இதுபோன்ற நலத்திட்டங்களை எந்த ஒரு முதல்வரும் அறிமுகம் செய்ததில்லை. சந்திரபாபு நாயுடு தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்குப் பிறகு வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து வெற்றி பெற நினைக்கிறார்.
ஆனால் மக்கள் ஜெகன்மோகன் முதல்வராக வேண்டும் என்ற உறுதியுடன் வாக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே யார் என்ன செய்தாலும் மக்கள் மனதில் ஜெகன்மோகன் உள்ளார். எனவே அவரே மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.

 

The post ஜெகன்மோகன் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைக்கிறார் சந்திரபாபு: அமைச்சர் ரோஜா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jaganmohan ,Chief Minister ,Chandrababu ,Minister ,Roja ,Tirumala ,Andhra State Tourism Minister ,Swami ,Tirupati Eyumalayan temple ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...