×

சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவியைச் சேர்ந்தவர் ராஜீவ் (36). தொழிலாளி. இவரது மனைவி விஜி (30). இவர்களது மகள் வின்சிலின்(6).இந்த நிலையில் ராஜீவ், தன் செல்போனுக்கு கடன் கொடுப்பதாக வந்த லிங்கை பதிவிறக்கம் செய்துள்ளார். உடனே அவரது செல்போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டு ரூ.2 லட்சம் கடன் வழங்க தயாராக இருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் தயார் செய்யும் செலவு இருப்பதாகவும் கூறினர். இதை நம்பிய ராஜீவ் தன் நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினார். ஆனால், அந்த நபர் கூறியபடி கடன் பெற்று தரவில்லை. அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், ராஜீவுக்கு ரூ.40 ஆயிரம் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜீவ் கடந்த 30ம் தேதி எலி மருந்தை மகள் மற்றும் மனைவிக்கு கொடுத்து அவரும் தின்று குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இதையறிந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை வின்சிலின் இறந்தது. இந்தநிலையில் சிச்சை பெற்று வந்த தாய் விஜியும் நேற்று இரவில் இறந்தார். ராஜீவ் தொடர் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post சிறுமி இறந்த நிலையில் தாயும் பரிதாப பலி: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Rajeev ,Karadivavi ,Palladam ,Tirupur district ,Viji ,Vincylin ,
× RELATED ஆன்லைன் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: சிறுமி உயிரிழப்பு