×

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம்

சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்;

“இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024 அன்று நடைபெற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, 04.06.2024 அன்று நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையினை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தென்சென்னை, மத்தியசென்னை மற்றும் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட வாக்கு எண்ணிக்கைக்கான பொது பார்வையாளர்கள் வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் இராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, (Mr.Kartikay Dhanji Budhdhabhatti, I.A.S.,) (கைபேசி எண். 94459 10953) , பெரம்பூர், கொளத்தூர் மற்றும் வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராஜேஷ் குமார். எஸ்.சி.எஸ்.. (Mr. Rajesh Kumar, SCS.,) (கைபேசி எண். 94459 10932) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், எழும்பூர் மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜிதேந்திரா ககுஸ்தே, எஸ்.சி.எஸ். (Mr. Jitendra Kakuste, SCS.,) (கைபேசி எண். 94459 10940) , சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு டாக்டர் டி. சுரேஷ், , (Dr. D. Suresh, I.A.S.,) (கைபேசி எண்.9445910956) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை மற்றும் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு முத்தாடா ரவிச்சந்திரா, (Thiru. Muddada Ravichandra, I.A.S.,) (கைபேசி எண். 94459 10957) , மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு முகமது சஃபிக் சக், எஸ்.சி.எஸ். (Mr. Mohammed Shafiq Chak, SCS.,) (கைபேசி எண்.94459 10945) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

The post மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai district ,Chennai ,Election Commission of India ,2024 Parliamentary General Election ,Tamil Nadu ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான...