×

சில்லி பாய்ன்ட்…

* சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ஜப்பானின் சிஹரு ஷிடா – நமி மட்சுயாமா (4வது ரேங்க்) இணையுடன் மோதிய இந்தியாவின் த்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-23, 11-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவியது.
* அயர்லாந்து – இலங்கை மோதிய உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில், இலங்கை 41 ரன் வித்தியாசத்தில் வென்றது. இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன் (மேத்யூஸ் 32* ரன்); அயர்லாந்து 18.2 ஓவரில் 122 ரன் ஆல் அவுட்.
* போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 55 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. ஆப்கான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 178 ரன் (குல்பாதின் 69 ரன்); ஸ்காட்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்.
* பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் என்.ஸ்ரீராம் பாலாஜி – எம்.ஏ.வரேலா மார்ட்டின்ஸ் (மெக்சிகோ) இணை 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட எலனா ரைபாகினா, அரினா சபலெங்கா, வார்வரா கிரசெவா தகுதி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆகர் அலியஸிமி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Singapore Open Badminton series ,India ,Threesa Jolly - Gayatri Gopichand ,Japan ,Chiharu Shida - Nami Matsuyama ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் ஜாலி – காயத்ரி