×

கோவை ஓட்டல் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு ரூ.4.10 கோடி சிக்கியது

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பெரோஸ்கான். இவர், பெங்களூரில் ஸ்டார் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை கர்நாடக மாநில வருமான வரி அதிகாரிகள், சென்னை, கோவை வருமான வரி அதிகாரிகள் குழுவினர் குனியமுத்தூரில் உள்ள பெரோஸ்கான் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, பெரோஸ்கான் பெங்களூரில் இருப்பதாக தெரியவந்தது. அவரது பெற்றோர் மட்டும் வீட்டில் இருந்தனர். சோதனையின் போது வீட்டில் இருந்து ரூ.4.10 கோடி, சில ஆவணங்கள் மற்றும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கோவை ஓட்டல் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு ரூ.4.10 கோடி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Gowai ,Otal ,Chadhar ,KOWAI ,PEROSKAN ,KUNIAMUTHUR ,Star Hotel ,Bangalore ,Karnataka ,Chennai ,Goa Hotel ,Chakhapar ,
× RELATED நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்...