×

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி: திமுக அறிவிப்பு

சென்னை: கலைஞர் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைஞர் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை 9 மணிக்கு கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அதைத் தொடர்ந்து காலை 9.15 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். மேலும் காலை 9.30 மணிக்கு சென்னை, கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும், காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதையும் செலுத்துகிறார். இவ்வாறு திமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி: திமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,CHENNAI ,M. K. Stalin ,
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...