×

மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் ஒரே தீர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது: கருணை மதிப்பெண்களை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டதன் மூலம் சமீபத்திய நீட் முறைகேட்டிலிருந்து தப்பிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்வது அவர்களின் திறமை இன்மையின் மற்றொரு ஒப்புதலாகும். மாநிலங்களின் உரிமையைப் பறித்த பிறகு, முறைகேடுகளின் மையமாக விளங்கும் பிரச்னைகள் மற்றும் ஒழுங்கற்ற முறையில் தேர்வுகளை நடத்துதல் போன்ற முக்கியப் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப அனுமதிக்கக் கூடாது. ஒன்றிய அரசின் திறமை இன்மையையும், லட்சக்கணக்கான மாணவர்களின் வேதனையைப் பற்றிய அவர்களின் அக்கறையின்மையையும் கண்டிக்கும் அதே வேளையில், மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையைத் தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பது தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

The post மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு முறையை தீர்மானிப்பதில் மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுப்பதுதான் ஒரே தீர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகள்...