×

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்குகள் 3 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறுகின்றன. தென் சென்னை தொகுதி வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும், வடசென்னை தொகுதி வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்குகள் லயோலா கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்த 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சேர்த்து மொத்தம் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் மேற்பார்வையில், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் தர்மராஜன் ஆகியோர் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளனர். இதில் 10 காவல்துணை ஆணையர்கள், 35 உதவி ஆணையர்கள், 70 காவல் ஆய்வாளர்கள் 120 உதவி ஆய்வாளர்கள் சட்டம் ஒழுங்கு ஆயுதப்படை போலீசார் என 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்க வஜ்ரா, வருண் போன்ற போலீஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க வாக்கு எண்ணிக்கை மையங்களை ஒட்டிய பகுதிகளிலும் தேவைக்கு ஏற்ப போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

 

The post சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...