×

டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர் வி.ஜே.சித்து மீது கமிஷனர் ஆபீசில் புகார்

சென்னை: டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர் வி.ஜே.சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செரின் ஜே என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் யூடியூபர் வி.ஜே.சித்து, அவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அஜாக்கிரதையாக செல்போனில் பேசிய படியே காரை இயக்கியிருக்கிறார்.
இதைப் பார்த்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும், மட்டுமல்லாமல் அவருடைய வீடியோவில் ஆபாசமான வார்த்தைகளையும் இரட்டை அர்த்த வசனங்களையும் பேசிவருகிறார். இது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே தவறாக பேசும் பழக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே வி.ஜே.சித்து என்பவர் மீது செல்போனில் பேசியபடி வாகனத்தை ஓட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகள் மற்றும் சட்டவிதிகளை மீறியதைடுத்து அவர் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர் வி.ஜே.சித்து மீது கமிஷனர் ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : YouTuber ,VJ Sidhu ,TDF ,Chennai ,Chennai Commissioner ,Serin J ,Chennai Police Commissioner ,Commissioner's Office ,Dinakaran ,
× RELATED செல்போன், ஓட்டுநர் உரிமத்துடன் ஆஜராக யூடியூபர் வாசனுக்கு சம்மன்