×

இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2024-25ம் ஆண்டு இளநிலை படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த 4 இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்துகிறது. அந்த வகையில் 2024-25ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக சேர்க்கைக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக இளநிலை படிப்புகளுகளுக்கு, மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப பதிவு ஜூன் 6ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://adm.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள், அயல்நாட்டினர் ஆகியோர் தங்களுக்கான இட ஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் கூடுதல் விவரங்களை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு ஜூன் 3 முதல் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamilnadu Veterinary Science University ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED இளநிலை கால்நடை மருத்துவ...