×

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் ஜாலி – காயத்ரி

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் த்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் இணை தகுதி பெற்றது. காலிறுதியில் கொரியாவின் கிம் சோ யியாங் – கோங் ஹீ யோங் இணையுடன் மோதிய இந்திய ஜோடி 8-21 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது. எனினும், பின்னர் சுதாரித்துக்கொண்டு அதிரடியாக விளையாடிய த்ரீசா – காயத்ரி ஜோடி அடுத்த 2 செட்களையும் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 19 நிமிடங்களுக்கு நீண்டது. இரட்டையர் பிரிவுக்கான உலக தரவரிசையில் கொரிய இணை 6வது இடத்திலும், இந்திய இணை 30வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜப்பானின் சிஹரு ஷிடா – நமி மட்சுயாமா (4வது ரேங்க்) இணையுடன் இந்திய இணை மோத உள்ளது.

 

The post சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் ஜாலி – காயத்ரி appeared first on Dinakaran.

Tags : Singapore Open Badminton ,Jolly ,Gayatri ,India ,Threesa Jolly - Gayatri Gopichand ,Singapore Open Badminton Series ,Korea ,Kim So Yeong - Gong Hee Yong ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…