×

வாக்குப் பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்து கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய நிலையில் 7வது மற்றும் கடைசிகட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடந்த மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
இதைதொடர்ந்து ஏப்ரல் 19ம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 1ம் தேதி(இன்று) மாலை 6.30 மணி வரை தேர்தல் கருத்து கணிப்புகளை வௌியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு தொடர்பான விவாதங்களில் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், ஊடக பிரிவு தலைவருமான பவன் கேரா தன் டிவிட்டர் பதிவில், “வாக்காளர்கள் வாக்களித்து தங்கள் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர். ஜூன் 4ம் தேதி அவர்களின் தீர்ப்பு(தேர்தல் முடிவுகள்) வௌியாகும். அதற்கு முன்பாக தொலைக்காட்சிகளின் டிஆர்பிக்காக தேர்தல் முடிவுகள் தொடர்பான ஊகங்களை சொல்லும் எந்தவித விவாதங்களிலும் காங்கிரஸ் கலந்து கொள்ளாது. எந்தவொரு விவாதத்தின் நோக்கமும் மக்களுக்கு தெரிவிப்பதாக இருக்க வேண்டும். அதனால் வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்காது. ஜூன் 4ம் தேதிக்கு பிறகு மகிழ்ச்சியுடன் விவாதங்களில் காங்கிரஸ் பங்கேற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

 

The post வாக்குப் பதிவுக்கு பிந்தைய தேர்தல் கருத்து கணிப்பு விவாதங்களில் பங்கேற்க மாட்டோம்: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,New Delhi ,18th Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான்...