×

தாய்ப்பாலை சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து விற்ற கடைக்கு சீல் வைப்பு.. 50 பாட்டில்கள் பறிமுதல்..!!

சென்னை: சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலை காசுக்கு விற்பனை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆன்லைனிலும் தாய்ப்பால் விற்பனை நடைபெற்று வருவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் சென்னையில் தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மதாவரத்தில் முத்தையா என்பவர் புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் கடையில் சோதனை நடத்தினர். புரதச்சத்து மருந்துகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தாய்ப்பால் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கஸ்தூரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தாய்ப்பால் நிரப்பப்பட்ட 50 பாட்டில்களை பறிமுதல் செய்து ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகரத்தில் சட்டவிரோதமாக பாட்டில்களில் தாய்ப்பால் விற்ற முத்தையா என்பவரின் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், தாய்ப்பால் விற்பனை தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தாய்ப்பாலை விற்கக் கூடாது: உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை
தாய்ப்பாலை வணிகரீதியில் விற்பதோ, தாய்ப்பாலில் தயாரித்த பொருட்களை விற்பதோ கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு அறிவுறுத்தியுள்ளது. வணிகரீதியில் தாய்ப்பால், அதை கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பதை நிறுத்த வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறி தாய்ப்பாலை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. தாய்ப்பால் விற்கப்படுவதை மாநில, ஒன்றிய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

The post தாய்ப்பாலை சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து விற்ற கடைக்கு சீல் வைப்பு.. 50 பாட்டில்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Muthiah ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்