×

பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு


ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊட்டி அருகே பைக்காரா அணை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் நடுவே அமைந்துள்ள இந்த அணையில் இருந்து மின் உற்பத்திகாக தண்ணீர் நாள்தோறும் திறக்கப்படுகிறது. தண்ணீர் திறக்கும் போது, மின் உற்பத்தி செய்த பின்னர் தண்ணீர் அணையில் இருந்து பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் உள்ள பெரிய பாறைகள் மீது பாய்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக காட்சியளிக்கும்.போதிய மழை பெய்யாத நிலையில்,அணையில் தண்ணீர் குறைந்தே காணப்படுகிறது.

எனினும், அவ்வப்போது மின் உற்பத்திக்காக இந்த அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், பைக்காரா நீர் வீழ்ச்சியில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு போல ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தற்போது இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து செல்கின்றனர். கோடை விடுமுறை என்பதால், தற்போது இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்லும் நிலையில், அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது.

The post பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Tags : Baikara Falls ,Ooty ,Baikara Dam ,Dinakaran ,
× RELATED பைக்காரா நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு