×

கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 கிலோ 600 கிராம் பறிமுதல்

 

திருப்பூர், மே 31: திருப்பூர் – வஞ்சிபாளையம் ரோட்டில் திருமுருகன் பூண்டி போலீசார் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தர்மேந்திர குமார் ( 25) என்பதும், திருப்பூர் இடுவம்பாளையத்தில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அம்மாபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற தனுஷ் (18) என்பவரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் கங்காநகர், முட்டை அட்டை கிரவுண்ட் பகுதியில் கஞ்சா விற்ற சிவபாலன் (27) என்பவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்ற ராகுல்குமார் (22), அமித்குமார் (22) ஆகியோரை 15.வேலம்பாளையம் போலீசார் கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 5 பேர் கைது: 3 கிலோ 600 கிராம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Thirumurugan Bundi police ,Tirupur – Vanchipalayam road ,Dharmendra ,Bihar ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து