- கல்லணை கால்வாய் நதி
- வீட்டில்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் கல்லணை கால்வாய் நதி
- நீர் வளங்கள்
- தஞ்சாவூர் நீர்வளத் துறை
- சுற்றுலா
- தின மலர்
தஞ்சாவூர், மே 31: தஞ்சாவூர் கல்லணை கால்வாய் ஆற்றில் நீர்வளத்துறை சார்பில் சுற்றுலா மாளிகை அருகே பொக்லைன் இயந்திரம் மற்றும் ஆட்கள் மூலம் குப்பைகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடைபெற்றது.
தஞ்சாவூர் நீர்வளத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கல்லணை கால்வாய் 42 கிமீ. முதல் 43.5 கிமீ. வரையிலான பகுதி தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள சுற்றுலா மாளிகை, எம்கே மூப்பனார் சாலை பகுதியில் செல்கிறது. இப்பகுதியில் கால்வாயை கடந்து செல்லும் தஞ்சை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கழிவுநீர் வடிகால் கட்டுமானம் கடந்த 3 ஆண்டுகளாக சேதமடைந்து கழிவுநீர் பாசன தண்ணீருடன் கல்க்கிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்வாய்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து குப்பைகளை கால்வாயில் கொட்டி வருகின்றனர்.
இதை தடுக்க மாநகராட்சிக்கு பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை வடிகால் கட்டுமானம் சேதமடைந்த பகுதி சரி செய்யப்படவில்லை. குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கால்வாயில் தண்ணீர் பாசனத்துக்கு நிறுத்தப்பட்ட பின்னர் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் நீர்வளத்துறை சார்பில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாயில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 4,500 பேருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி சுற்றுலா மாளிகை அருகே கல்லணை கால்வாய் ஆற்றில் குப்பை, கழிவுநீர் அகற்றும் பணி appeared first on Dinakaran.