×

ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றது தப்பா? ராமதாஸ் கேள்வி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் கந்து வட்டி கொடுமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து கந்து வட்டி கொடுமையால் உயிர் பலிகள் ஏற்படுகிறது.  எனவே கந்து வட்டி தண்டனை சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ள நிலையில் விசாரணை நடத்தி 50 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த ஊழல் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எந்த விதமான தவறும் இல்லை. இதற்கும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவர் என்று பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த அம்மையாரை அவர் அப்படி பார்க்கிறார். அவர் பார்வை அப்படி இருக்கிறது. இதில் என்ன தப்பு இருக்கிறது’ என்று எதிர் கேள்வி எழுப்பினார்.

The post ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்றது தப்பா? ராமதாஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Jayalalitha ,Hindutva ,Ramadoss ,Tindivanam ,BAMA ,Ramadas ,Thilapuram, Villupuram district ,Tamil Nadu ,Jayalalithaa ,Ramdas ,
× RELATED சொல்லிட்டாங்க…