திருவனந்தபுரம்: கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.12 கோடி விசி 490987 என்ற எண்ணுக்கு கிடைத்தது. இந்த லாட்டரி டிக்கெட் ஆலப்புழாவில் விற்பனையானது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்ற பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மதியம் வரை அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் ஆலப்புழா அருகே உள்ள பழவீடு என்ற பகுதியைச் சேர்ந்த விஷ்வம்பரன்(71) என்பவர் அந்த அதிர்ஷ்டசாலி என்பது தெரிய வந்துள்ளது. இவர் சிஆர்பிஎப் முன்னாள் காவலர் ஆவார். ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
The post முன்னாள் சிஆர்பிஎப் வீரருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு appeared first on Dinakaran.